senkettru.wordpress.com
தொழிலாளி வர்க்கத்தின் நீதிமன்றப் போராளி வழக்குரைஞர் அஜய் கோஷ் மறைவு பேரதிர்ச்சி!
======================================================= கி. வெங்கட்ராமன், பொதுச் செயலாளர், தமிழ்த்தேசியப் பேரியக்கம் ======================================================= சென்னை உயர்நீதிமன்ற முன்னணி வழக்குரைஞர் தோழர் வீ. அஜய் கோஷ் அவர்களின் திடீர் மரணம் என்னை அதிர்ச்சியில் உறைய வைத்து விட்டது. நீதிமன்ற வளாகத்தில் தொழிலாளர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த நீதித்துறை போராளியாக அஜய் கோஷ் அவர்கள் திகழ்ந்தார்கள். இவருடைய தந்தையார் பொதுவுடைமை இயக்கத்தில் செயலாற்றியவர் என்பதால், இவருக்கு பொதுவுடைமை இயக்கத் தலைவர் அஜய் கோஷ் பெயரைச் சூட்டியிருக்கிறார். நீதிபதி து. அரபரந்தாமன் வழக்குரைஞராக இருந்த போது அவரிடம் இளம் வழக்குரைஞராக இணைந்து பணியாற்றத் தொடங்கிய காலத்திலிருந்து கடந்த கால் நூற்றாண்டு காலமாக வழக்குரைஞர் தோழர் அஜய் கோஷ் அவர்களை நான் அறிவேன்.
Kris 




